உலகம் செய்தி

போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

உலகம்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இராப்போசன விருந்து இரத்து!

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானதை தொடர்ந்து இரவு நேர விருந்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. இரகசிய சேவை அதிகாரி மீது மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதுடன், தற்போது அந்த அதிகாரி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும் ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கான […]

இலங்கை செய்தி

இலங்கையில் தென்படவுள்ள விண்கல் மழை – விண்வெளி ஆர்வலர்களுக்கு அரிய தருணம்

  • April 26, 2026
  • 0 Comments

வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற ‘ஹேலி வால்நட்சத்திரம்’ விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது. இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும். இந்த விண்கல் […]

ஐரோப்பா

போர் களத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்திய உக்ரைன் – களமிறக்கப்பட்ட ரோபோக்கள்!

  • April 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகள் தொலைக்கட்டுப்பாட்டுத் தரை ரோபோக்களின் (UGV) பயன்பாட்டை கணிசமாக அதிகரித்து வருகின்றன. கார்கிவ் பகுதியில் 3வது தனித்த தாக்குதல் படைப்பிரிவு மேற்கொண்ட ஒரு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு, காலாட்படை இழப்புகள் இன்றி UGV-களும் ட்ரோன்களும் நிலப்பரப்பை மீட்டெடுத்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார். அதிக ஆபத்துள்ள பணிகளுக்காக 30 சதவீதம் வரையிலான காலாட்படையினருக்குப் பதிலாக UGV-களைப் பயன்படுத்த தளபதிகள் இலக்கு வைத்துள்ளனர். UGV-கள் போர்க்கள தளவாடங்களையும் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான மண்டபம் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்காது

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் தற்போது கட்டப்பட்டு வரும் மிக உயர்தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட மண்டபம் இருந்திருந்தால், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 150 ஆண்டுகளாக இராணுவமும் பல ஜனாதிபதிகளும், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பெரிய மற்றும் பாதுகாப்பான மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அந்த மண்டபத்தில் உயர் […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் – ட்ரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் 

  • April 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, ட்ரம்புக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார் என டவுனிங் தெரு அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு, மத்திய கிழக்கு நிலைமை குறித்தும் […]

இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி 

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் […]

இலங்கை செய்தி

அர்ச்சுனாவுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் 

  • April 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு நிலவி வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி […]

உலகம் செய்தி

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

  • April 26, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை ( 27 ) கையெழுத்தாகும் என்று இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்தார். நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சருடன் ஆக்ரா சென்றிருந்தபோது அவருடன் உரையாடியதை தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது, “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பல […]

ஐரோப்பா

ஈரான் போர் முடிவடைந்தாலும் எரிசக்திக்கான விலை உயர்வு தொடரும்!!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் போர் முடிவடைந்த பின்னரும், எரிசக்தி, உணவு மற்றும் விமானப் பயணங்களுக்கான விலை உயர்வு குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று பிரித்தானிய அமைச்சரான டேரன் ஜோன்ஸ்,  (Darren Jones) எச்சரித்துள்ளார். இந்தப் பொருளாதாரத் தாக்கங்களுக்கு “மத்திய கிழக்கில் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்படக்கூடிய பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான தனது திட்டமிடலை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பொருட்கள் இருப்பு நிலைகளைக் கண்காணிக்கவும், விநியோகச் […]

error: Content is protected !!