இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் – காவியை பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

  • April 26, 2026
  • 0 Comments

புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) […]

ஐரோப்பா செய்தி

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு – மன்னர் சார்லஸின் அமெரிக்க பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமரின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வார பயணத்திற்கு முன்பாக பாதுகாப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற […]

உலகம்

தைவான் அதிபருக்கு வான்வழி அணுகளை மறுத்த நாடுகள் – சீனாதான் காரணமா?

  • April 26, 2026
  • 0 Comments

தைவானின் அதிபர் லாய் சிங்-தே ( Lai Ching-te’s) ஆப்பிரிக்க நாடான  எஸ்வதினிக்கு  செல்ல இருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லின் சியா-லுங் ( Lin Chia-lung) எஸ்வதினிக்கு பயணம் மேற்கொண்டார். சீனிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அதிபர் லாயின் விமானம் செஷல்ஸ், மொரிஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளின் வான்பரப்பை அணுக அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் […]

இலங்கை

All Ceylon Emergency Vehicle Service திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு!!

  • April 26, 2026
  • 0 Comments

All Ceylon Emergency Vehicle Service  இன் மாவட்ட  இணைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (25) Nilaveli Royal Paradise விருந்தகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இதுவரை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. திருகோணமலை வைத்தியசாலையில் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை குளிப்பாட்டல் மற்றும் கபன் இடல் செய்வதற்கான மைய்யத் (Mayyath) வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட்டது. […]

உலகம் செய்தி

போர் நிறுத்த அமுலிலும் இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் பரஸ்பர தாக்குதல்

  • April 26, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேலும் ஹெஸ்பொல்லா அமைப்பும் பரஸ்பர தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல், தற்காப்பு நடவடிக்கைகளின் பெயரில் தாம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெஸ்பொல்லா தாக்குதல்கள் தொடர்ந்தால் லெபனானின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால், போர் நிறுத்தம் நடைமுறையில் பலனின்றி, நிலைமை மேலும் பதற்றமாகி வருகிறது.

உலகம் செய்தி

ஈரானில் இணைய முடக்கம் 58 ஆவது நாளாக நீடிப்பு – தொழில்,வணிகம் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானில் முழுமையான இணையத் தடை 58 ஆவது நாளாகத் தொடர்கிறது எனற இணையக் கண்காணிப்பு அமைப்பான NetBlocks தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தகவலுக்கமைய, இந்த இணைய முடக்கம் தொடர்ந்து 1368 மணிநேரத்தைக் கடந்து, தற்போது ஒன்பதாவது வாரமாக நீடித்து வருகிறது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் மீண்டும் உருவான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், கெடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கு போர் தொடங்கியதையடுத்து, இணையக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இந்த கடுமையான […]

ஐரோப்பா

சுவிஸ் செல்ல இருந்த விமானத்தில் பதற்றம் – பயணிகள் வெளியேற்றம்!

  • April 26, 2026
  • 0 Comments

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் செல்ல இருந்த விமானம் ஒன்று கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏர்பஸ் A330 ரக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்படும் அபாயம் இருப்பது இறுதி நிமிடத்தில் கண்டறியப்பட்டதுடன்,  விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விரைவான அவசரகால வெளியேற்றம் நடைபெற்றது. பயணிகள் காற்றடைக்கப்பட்ட சரிவுப்பாதைகளைப் பயன்படுத்தி, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வெளியேற்றத்தின் போது ஆறு […]

இலங்கை

யாழில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

  • April 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலமொன்றின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அர்ச்சுனா குறித்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், பெண்ணும் அந்த சொத்துக்கு உரிமைக்கோரியுள்ளார். அர்ச்சுனா அந்த நிலத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் துப்பாக்கியை […]

இலங்கை

தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில் கோர விபத்து!

  • April 26, 2026
  • 0 Comments

தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில், இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (26) காலை சுமார் 9:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்று அரசுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது. இதில  11 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நாலந்தா பிராந்திய மருத்துவமனை மற்றும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், அதேசமயம் இலங்கை […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடைகளால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தையில் […]

error: Content is protected !!