முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ஐபோன் டுயோ அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ‘ஐபோன் டுயோ’வை (iPhone Duo) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் டுயோ விரித்து வைக்கும்போது இதுவரை வந்ததிலேயே மிகவும் மெல்லிய ஐபோனாகத் திகழ்கிறது; இதில் இரண்டு திரைகள் உள்ளன – ஒன்று வெளிப்புறத்திலும், மற்றொன்று புத்தகத்தைப் போல விரிக்கும்போது தெரியும் பெரிய திரையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ், பிற நிறுவனங்களின் மடிக்கக்கூடிய தொலைபேசிகள் வெறும் இரண்டு தொலைபேசிகளை ஒன்றாக ஒட்டியது போல இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆப்பிளின் இந்தச் சாதனம் தனது பல மற்றும் பெரிய திரைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவே கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐபோன் டுயோவில் ஒரே நேரத்தில் பல செயலிகளைப் (apps) பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய மென்பொருள் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.




