இலக்கை மாற்றிய ரஷ்யா – பற்றி எரிந்த உக்ரைனின் பெட்ரோல் நிலையம்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பெட்ரோல் நிலையத்தை ரஷ்ய படைகள் முதன் முறையாக தாக்கியுள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ Vitali Klitschko தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீ விபத்தால் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், அருகில் இருந்து கட்டிடங்களுக்கும் தீ பரவியதாக அவசரகால சேவைத் துறை தெரிவித்தது.
“இத்தகைய தாக்குதல்களில் எந்த இராணுவ நோக்கமும் இல்லை. இது பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாதச் செயல்,” என்று பெட்ரோல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி போஹ்தான் குகுரா Bohdan Kukura விமர்சித்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கீவ் நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து, ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல் உக்ரைனின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.




