இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரை, ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, அமைச்சர் அனுமான் பாதத்தை தரிசித்ததுடன், புனித கங்கையில் இறங்கி கங்கா தரிசனமும் செய்தார்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இராகலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பயனாளிகள் அமைச்சரை சந்தித்து, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

அவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை