ஐரோப்பா

ஈரான் போர் முடிவடைந்தாலும் எரிசக்திக்கான விலை உயர்வு தொடரும்!!

ஈரான் போர் முடிவடைந்த பின்னரும், எரிசக்தி, உணவு மற்றும் விமானப் பயணங்களுக்கான விலை உயர்வு குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று பிரித்தானிய அமைச்சரான டேரன் ஜோன்ஸ்,  (Darren Jones) எச்சரித்துள்ளார்.

இந்தப் பொருளாதாரத் தாக்கங்களுக்கு “மத்திய கிழக்கில் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்படக்கூடிய பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான தனது திட்டமிடலை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

பொருட்கள் இருப்பு நிலைகளைக் கண்காணிக்கவும், விநியோகச் சங்கிலித் தடைகளைச் சரிசெய்யவும்  அமைச்சரவைக் குழுவும், அமைச்சர்கள் அவசரகாலக் குழுவும் தொடர்ந்து  கலந்துரையாடி வருகின்றன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!