உலகம் செய்தி

சிரிய முகாமிலுள்ள ஆஸ்திரேலிய பெண்களுக்கு அடைக்கலம் கிடைப்பதில் சிக்கல்!

  • April 27, 2026
  • 0 Comments

சிரியாவின் அல்-ரோஜ் முகாமில் தங்கியிருந்த நான்கு ஆஸ்திரேலியப் பெண்களும் ஒன்பது குழந்தைகளும் தற்போது அங்கிருந்து வெளியேறித் தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை சிரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்குப் பயணக் கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ள போதிலும், அவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான நேரடி உதவிகளைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான […]

உலகம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • April 27, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறிய நகரத்திற்கு மேற்கே 18 கிலோமீட்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின் ‘தாயகம்’ பறிபோகும்!

  • April 27, 2026
  • 0 Comments

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் ஒற்றுமை முயற்சிக்கு மத்தியில், தமிழ்த் தேசியப் பேரவை பிறிதொரு மாற்றுக் குழுவை முன்மொழிந்துள்ளமையானது தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அண்மைக் காலமாகப் பல சந்திப்புகளைக் கொழும்பில் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இறுதி பந்துவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர்வரை சென்றது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு […]

இலங்கை செய்தி

வவுனியாவில் தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வநாயகத்தின் 49 ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இந்த நிகழ்வுது இடம்பெற்றிருந்தது. இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது

  • April 26, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளுக்கும் தடுப்பு காவல் 

  • April 26, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பா

லண்டனில் நீரில் மூழ்கி தாயும், சேயும் உயிரிழப்பு!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனின்  எல்தோர்ன் (Elthorne) பூங்காவில் அமைந்துள்ள நீர்நிலையில் சிக்கித் தவித்த தாயும், மகனும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெருநகர காவல்துறையினர்  நீரில் மூழ்கியிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சையளித்தபோதிலும், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர்களின் மரணங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. துப்பறியும் கண்காணிப்பாளர் பீட் தாக்கரே, குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, முதலுதவி அளித்தவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சிகளையும் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம்

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!!

  • April 26, 2026
  • 0 Comments

சிகாகோவில்  மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிகாகோவில் உள்ள எண்டெவர் ஹெல்த் ஸ்வீடிஷ் ( Endeavor Health Swedish) மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஒருவரைக் கண்காணிப்பிற்காக அழைத்துச் சென்றபோது, ​​சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிகாகோ மேயர் பிராண்டன் […]

error: Content is protected !!