போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு
வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.





