இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 15000 புள்ளிகளை தாண்டிய பங்கு சந்தை!

  • December 23, 2024
  • 0 Comments

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (23) வரலாற்றில் முதல் தடவையாக 15,000 புள்ளிகளைத் தாண்டியது. சில நிமிடங்களுக்கு முன்பு (காலை 11:45 மணி) 15,047.81 அலகுகளாக காணப்பட்டது. அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைக் குறியீடுகளும் நாளின் போது 237.11 புள்ளிகள் வளர்ச்சியைக் காட்டியது.

வட அமெரிக்கா

நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் எரியூட்டிக் கொலை

  • December 23, 2024
  • 0 Comments

நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை தபர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொன்றதாக அந்நகரக் காவல்துறை தெரிவித்தது.இதில் அப்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 22ஆம் திகதி காலை நிகழ்ந்தது. அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்தனர்.ஆனால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கூறியது. இதையடுத்து, பெண்ணை எரியூட்டிக் கொன்ற நபரை அதிகாரிகள் வலைவீசித் தேடினர்.சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் அடையாளம், வயது ஆகியவை உடனடியாக வெளியிடப்படவில்லை. தாக்குதலுக்கான […]

இலங்கை செய்தி

இலங்கை 4 பாடசாலை மாணவர்களிடம் பெருந்தொகை 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மீட்பு

  • December 23, 2024
  • 0 Comments

திகன பிரதேசத்தில் 57 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் 4 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பாடசாலை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. திகன நகரில் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்தெனிய தலைமையக பொலிஸாரால் 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திகன பிரதேசத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பொருட்களை கொள்வனவு […]

பொழுதுபோக்கு

விடுதலை 2 வசூல் விபரம் – வெற்றிமாறன் படத்துக்கே இந்த நிலையா?

  • December 23, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அவர் இதுவரை 7 படங்கள் இயக்கி உள்ளார். அந்த 7 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள 8-வது படம் தான் விடுதலை. இப்படத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சூரி, நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர்கள் ராஜீவ் மேனன் மற்றும் கெளதம் மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விடுதலை […]

செய்தி

முதுகு, கை மற்றும் கால்களில் வலி இருந்தால் உடனே மருத்துவரை நாட வேண்டும் – ஆண்களுக்கு எச்சரிக்கை

  • December 23, 2024
  • 0 Comments

புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளின் உதவியுடன், அதை முதல் நிலையிலேயே குணப்படுத்த முடியும். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அதனை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் ஆண்களுக்கு ஆபத்து, 40 வயதிற்கு மேல் ஆகியிருந்து இப்படியான அறிகுறிகள் இருந்தால் ஒரு நாள் கூட இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள், இது புரோஸ்டேட் புற்றுநோய் தீவிரப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. WHO இன் கூற்றுப்படி, புரோஸ்டேட் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு

  • December 23, 2024
  • 0 Comments

இலங்கையில் ஜனவரி 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் பாடசாலை தவணை ஜனவரி மாதம் 24 ஆம் திகதிவெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று அமைச்சு கூறுகிறது. அது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் வாரக்கணக்கில் எரியப்போகும் பயங்கர காட்டுத்தீ! மக்கள் வெளியேற்றம்

  • December 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயானது இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள ஆயிரகணக்கான மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் சுற்றுலான துறை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு மாநிலமான விக்டோரியாவிலுள்ள கிராம்பியான்ஸ் தேசியப் பூங்காவில் கடந்த திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீயானது தொடர்ந்து வீசிய காற்றினாலும் அப்பகுதியிலுள்ள அதிக வெப்பத்தினாலும் தொடர்ந்து பரவியது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்களில் அது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் TikTok செயலி தடை தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • December 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் TikTok செயலி தொடர்ந்து நீடிக்க அனுமதி அளிக்க விரும்புவதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் அவர் TikTok கணக்கைத் தொடங்கினார். அப்போதிருந்து தம்முடைய காணொளிகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதை டிரம்ப் சுட்டினார். தேசியப் பாதுகாப்பு அக்கறையால், அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான உத்தரவுக்கு ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். தடையை எதிர்த்து TikTok தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவதாக […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

உலகிலேயே அதிக வேலை நேரத்தைக் கொண்ட நாடு தொடர்பில் வெளியான தகவல்

  • December 23, 2024
  • 0 Comments

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பணியாளர் சமூகம் ஆண்டுதோறும் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பது குறித்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை OECD நடத்தியுள்ளது. தரவரிசையின்படி, கொலம்பியா உலகிலேயே அதிக வேலை நேரத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. மேலும் ஒரு கொலம்பிய தொழிலாளி ஆண்டுக்கு சராசரியாக 2,405 மணிநேரம் வேலை செய்கிறார். இரண்டாவது இடத்துக்கு மெக்சிகோ தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மெக்சிகோ தொழிலாளி ஆண்டுக்கு சராசரியாக 2,226 மணிநேரம் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோஸ்டாரிகா பட்டியலில் மூன்றாவது […]

உலகம் செய்தி

பிரேசிலில் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

  • December 23, 2024
  • 0 Comments

தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் விமானியாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசி மற்றும் அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் இறந்ததாக அவரது நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட சில நிமிடங்களில், விமானம் ஒரு கட்டிடம் மற்றும் ஒரு வீடு மற்றும் கடையின் புகைபோக்கி மீது மோதியது. இந்த […]