இலங்கை

இலங்கை – பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி!

  • December 23, 2023
  • 0 Comments

பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் ரயிலில் அடிபட்டாரா அல்லது ரயிலில் பாய்ந்து காயம் அடைந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!! அவசர உதவி கோரிய பெண்ணையே சுட்டு கொன்ற பொலிஸார்

  • December 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு விடுத்த கறுப்பினப் பெண், விசாரணைக்குச் சென்ற பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கறுப்பினத்தோர் மீது காவல்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக நீடிக்கும் புகார்களின் மத்தியில், அண்மை சம்பவமாக இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நியானி ஃபின்லேசன் என்ற 27 வயது பெண், இரவு நேரத்தில் அமெரிக்காவின் அவசரகால உதவிக்கான 911 என்ற எண்ணை அழைத்தார். ஆண் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக, தனது வீட்டிலிருந்து நியானி அவசர அழைப்பு விடுத்தார். கவுண்டி […]

உலகம்

கலிபோர்னியாவில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இந்தியர்களுக்கு எதிரான சுலோகங்களை எழுதிய விஷமிகள்!

  • December 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் ஒரு இந்து கோவிலின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் கலிஸ்தானிக்கு ஆதரவான ஸ்லோகங்கள் எழுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. X தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்துக்களுக்கான எதிரான வாசகங்கள் எழுத்தப்பட்டுள்ளதை காட்டியுள்ளன. குறித்த வாசகங்களில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் பெயரும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுவொரு வெறுக்கத்தக்க செயல் என அமெரிக்க கட்டளை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெறுப்புக் குற்றமாக […]

பொழுதுபோக்கு

என்னது 500 கோடி வரதட்சணையா? தனது ஸ்டைலில் பதில் கூறிய பிரபு

  • December 23, 2023
  • 0 Comments

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அண்மையில் சென்னையில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்தது. காரணம் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் என்பதால் மிகவும் சிம்பிளாக நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் மிகவும் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் பிரபு ரூ. 500 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார் என்பது தான். இந்த விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் நடிகர் பிரபு காதில் போட அவரோ, ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்கிறது, இதுல […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் விசா தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்

  • December 23, 2023
  • 0 Comments

திறன் அடிப்படையிலான பட்டதாரிகளுக்கான ஆஸ்திரேலியா விசா திட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விசா வழங்கும் முறையின் கீழ், பொறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா விசாவைப் பெறுவதற்கான திறனைக் கொண்டிருந்தனர். ஆனால் நேற்று முதல் அதனை மட்டுப்படுத்த உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சமர்ப்பிக்கப்படாத வீசா விண்ணப்பங்களை கைவசம் வைத்திருக்கும் நபர்களுக்கு அதற்காக செலவிடப்பட்ட தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு

டி. இமானின் மனைவி விவகாரம்.. ஆதாரத்தை கண்ணில் பார்த்த பிரபலம்?

  • December 23, 2023
  • 0 Comments

கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கும் விஷயம் சிவகார்த்திகேயன், டி. இமான் விவகாரம் தான். இசையமைப்பாளர் டி. இமான் தனது மனைவியை விட்டு பிரிய முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் என ஒரே போடாய் போட்டுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என டி. இமான் அளித்த பேட்டியும் வைரலானது. மேலும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறார். அதே போல் சமூக வலைத்தளங்களிலும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஓயாமல் இருக்கும் இந்த […]

செய்தி

இலங்கையில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

  • December 23, 2023
  • 0 Comments

திருகோணமலை-நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) எனவும் தெரியவருகிறது. கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு வருகை தந்ததாகவும் பின்னர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக தாகத்தியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் மாலை நேரமாகியும் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வராததால் வயல் பகுதிக்கு தேடி சென்றதாகவும் […]

செய்தி

அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்

  • December 23, 2023
  • 0 Comments

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி […]

வாழ்வியல்

பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை – அறிகுறிகள் என்ன?

  • December 23, 2023
  • 0 Comments

உடல் ஆரோக்கியமும் தைராய்டும்: தைராய்டு என்பது ஹார்மோன் சுரப்பி ஆகும், இது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைப் பொறுத்து வேகத்தை குறைக்கிறது அல்லது அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதபோது உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தைராய்டு காரணமாக, உடலில் பல அறிகுறிகள் காணப்படுகின்றன, இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்வதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தைராய்டு தைராய்டு என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய். சில பெண்கள் […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் பெண்ணின் உயிரை பறித்த கிறிஸ்துமஸ் மரம்

  • December 23, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தின் Odenard இல் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விபத்து காரணமாக மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 63 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். விழுந்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!