இலங்கை

இலங்கையில் 3000 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பொலிஸாரால் பறிமுதல்

  • December 23, 2023
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த சொத்துக் கைப்பற்றப்பட்டதன் பெறுமதி 2938.73 லட்சம் ரூபா என பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன் கீழ் எடுக்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1427 இலட்சம் ரூபாவாகவும் காணி வீடுகள், ஸ்பாக்கள் மற்றும் ஆடம்பர வில்லாக்கள் போன்றவற்றின் பெறுமதி 1370 லட்சம் ரூபாவாகும். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 140.5 லட்சம் ரூபாயாகும். ஒரு லட்சத்து 23ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

செய்தி

பஞ்சத்தின் விளிம்பில் காஸா – பரிதாப நிலையில் மக்கள்

  • December 23, 2023
  • 0 Comments

இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் காஸா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸாவின் முழு மக்கள்தொகை வெவ்வேறு நிலையிலான பசி பட்டினியை எதிர்நோக்குவதாய் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.. இதே போக்கில் போர் தொடர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் காஸா கடும் பஞ்சத்தில் வாடும் என கூறப்படுகின்றது. சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் போர் தொடங்கியது. அதிலிருந்து அங்குள்ள மக்கள் உணவுக்காகப் போராடுகின்றனர். உதவிப் பொருள்கள் போதவில்லை. தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாட்டு […]

ஆசியா

தென் சீன கடல் பகுதியில் மீண்டும் பதற்ற நிலை!

  • December 23, 2023
  • 0 Comments

சீனா மீது பிலிப்பைன்ஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் வலுத்து வருகிறது. இத்தகைய பின்னணியில், தென்சீனக் கடல் பகுதியில் பதற்றத்தைத் தூண்டி, பிரச்சனையை கிளப்புவதாக சீனாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. சீனா சொல்வதை சீனா மட்டுமே நம்புகிறது என்றும் பிலிப்பைன்ஸ் கூறுகிறது. எனினும், இது தொடர்பாக சீனா இதுவரை பதிலளிக்கவில்லை. பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகிய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Google Chrome வேகம் குறைவாக இருந்தால் செய்ய வேண்டிய விடயம்!

  • December 23, 2023
  • 0 Comments

உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி கூகுள் குரோம். இது மிகவும் பிரபலமான வேகமாக செயல்படும் பிரவுசராக உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் என எல்லாவற்றிலும் இதைப் பயன்படுத்தலாம். என்னதான் இது வேகமான பிரவுசராக இருந்தாலும் சிலருக்கு குரோம் ஸ்லோவாக செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘ஹார்ட்வேர் ஆக்ஸிலரேஷன்’ எனப்படும் புதிய அம்சத்தை எனேபிள் செய்யலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலமாக வெப் பேஜ் வேகமாக லோடு செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்பெல்லாம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • December 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வருமானம் குறைந்த நடுத்தரக் குடும்பங்களின் பாவனைக்காக எலெக்றிக் கார்களை மாதம் 100 யூரோக்கள் கட்டணத்துக்கு வாடகைக்கு வழங்கும் அரசின் திட்டம் புத்தாண்டில் தொடங்கவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், கார்பன் வெளியேற்றத்தைத் குறைத்துச் சூழல் பேணும் மாற்றத்துக்கான தனது திட்டங்களில் ஒன்றாக இதனை 2022 தேர்தல்கால வாக்குறுதிகளில் வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டம் 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகிறது என்பதை அவர் தனது ‘எக்ஸ்(‘X) சமூக ஊடகத் தளத்தில் வீடியோ மூலம் அறிவித்திருக்கிறார். குறைந்தது […]

இலங்கை

இலங்கை சிறைச்சாலை ஒன்றில் மர்ம காய்ச்சல் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

  • December 23, 2023
  • 0 Comments

மாத்தறை சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று காய்ச்சல் ஒன்று பரவியதன் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமையின் அடிப்படையில் மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய கைதிகளை நீதிமன்றங்களினால் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி கைதிகளுக்கு உறவினர்களை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம்

  • December 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 12 யூரோவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு 12.41 யூரோக்கள் வரை அதிகரிக்கிறது. இந்த மாற்றம் காப்பீட்டுக்கு உட்பட்ட முக்கிய ஊழியர்களை மட்டுமல்ல, சிறு வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். அவர்கள், சம்பாதிக்கும் வரம்பு 18 யூரோக்கள் அதிகரித்து 538 யூரோக்களாக உயரும் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், சில தொழில்கள் அவற்றின் சொந்த குறைந்தபட்ச ஊதியங்களைக் கொண்டுள்ளன, அவை பொது விகிதத்தை […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

  • December 23, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர மாதங்களில் மனிதவள அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் உலோக வேலை தொடர்பான நிறுவனங்களில் பல பாதுகாப்பு குறைபாடுகளை அது கண்டறிந்தது. அக்டோபர் மற்றும் நவம்பர் இடையே 650 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்திய அமைச்சகம், அதில் மொத்தம் S$32,000 அபராதம் விதித்தது. மேலும், விதிமுறை மீறியதற்காக 498 எச்சரிக்கைகளையும் அமைச்சகம் வழங்கியது. அதோடு 14 உலோக வேலை நிறுவனங்களுக்கு குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் முதலாளிகளும், […]

இலங்கை

இலங்கையில் ஜனவரி மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை!

  • December 23, 2023
  • 0 Comments

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் […]

செய்தி மத்திய கிழக்கு

துபாயில் சட்டவிரோத பண்ணைகளின் கட்டுப்பாடு; ஆட்சியாளர் புதிய சட்டத்தை அறிவித்தார்

  • December 22, 2023
  • 0 Comments

அமீரகத்தில் சட்டவிரோத பண்ணைகளை கட்டுப்படுத்த சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, தனிநபர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத நிலத்தில் பண்ணைகள் அமைக்கவோ, வேலிகள் அமைக்கவோ அனுமதி இல்லை. பண்ணை கட்டுப்பாட்டுச் சட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெள்ளிக்கிழமை அறிவித்தார். சட்டத்தை மீறினால், 1,000 முதல் 100,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறினால் அபராதத்தை இரட்டிப்பாக்க சட்டம் வழிவகை செய்கிறது. தற்போதுள்ள அனைத்து […]

error: Content is protected !!