இலங்கை

மூன்றாவது நாளாக தொடரும் பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டம்

அனுராதபுரம் புனித நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக, அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் பௌத்த பிக்குகள் குழுவினர் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகம் இன்று (09) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட பிக்குகளிடம் பொலிஸார் நேற்று  வாக்குமூலங்களை  பதிவு செய்துள்ளனர்.

அனுராதபுரம் புனித நகர மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படும் வரை, தமது போராட்டம் தொடரும் என்று வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ருவன்வெலி மகா சேயவிற்கு அருகிலுள்ள ‘தன்சால்’ (தானசாலை) வளாகத்தில், இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்