வட அமெரிக்கா

கனடாவில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

  • December 26, 2023
  • 0 Comments

கனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான்.சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் […]

இந்தியா

உலக தலைவர்கள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ள சாதனை!

  • December 26, 2023
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களில் யூடியூப் வலைதைளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் தலைவராக மாறி சாதனை படைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் வலைதளம் 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது யூடியூப் தளம் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருந்த நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில்  பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரா உள்ளார். இவர் 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் மெக்சிகோ […]

இந்தியா

மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை – நல்லி எலும்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட திருமணம்!

  • December 26, 2023
  • 0 Comments

தெலங்கானாவில் நிச்சயதார்த்ததின் போது வழங்கப்பட்ட மட்டன் கிரேவில் நல்லி எலும்பு இல்லை என மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக மணமகளின் வீட்டில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தை பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் நடத்த இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்களுக்கு அசைவ […]

இலங்கை

போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் – இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • December 26, 2023
  • 0 Comments

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்சேர்ப்பு செய்த நபரை கைது செய்துள்ளனர். துபாய் மாநிலத்தில் உள்ள அழகு நிலையங்களில் பெண்களை துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதாக முகநூலில் விளம்பரம் செய்து சந்தேக நபர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஏஜென்ட் மூலம் கடத்தல்காரரை தொடர்பு கொண்டு சோதனை நடத்தப்பட்டது. குருநாகலில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக கடத்தல்காரர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்: இருபத்தோராயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

அக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 21,000 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,915 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 54,918 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 241 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 382 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் செயல்பாடுகளை குறைந்த தீவிரம் கொண்ட கட்டத்திற்கு மாற்றவும், பொதுமக்களின் இறப்புகளை குறைக்கவும் இஸ்ரேல் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு […]

உலகம்

சில Apple Watchகளை இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய அமெரிக்கா முடிவு!

  • December 26, 2023
  • 0 Comments

சில ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் முடிவை மீற வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மருத்துவ கண்காணிப்பு தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான மாசிமோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தடையானது இன்று (26.12) முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட ரத்த ஆக்ஸிஜனை அளவிடும் அம்சத்தை உள்ளடக்கிய ஆப்பிள் வாட்சுகளை குறிவைக்கிறது. தூதுவர் கேத்தரின் டாய், முழுமையான விவாதங்களுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஆணையத்தின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு நன்றி தெரிவித்த உக்ரைன்

உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் , “உக்ரைனின் போர் விமான விமானிகளுக்கு அடிப்படை பயிற்சி அளித்ததற்காக” பிரித்தானிய அரசாங்கத்திற்கு “ஆழ்ந்த நன்றியை தெரிவிக்க” விரும்புவதாக இன்று கூறியுளளார். உக்ரைனில் F-16 களை இயக்குவதற்கு எங்களுக்கு உதவ பிரித்தானிய மற்றும் பிற கூட்டாளிகள் வழங்கும் விமானி பயிற்சியை உக்ரைன் மிகவும் மதிக்கிறது. உக்ரைனுக்கான சர்வதேச விமானப்படை திறன் கூட்டணிக்கு இது மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.

ஆசியா

தைவானை சீனாவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது -ஷீ ஜின்பிங்

  • December 26, 2023
  • 0 Comments

தைவானை சீனாவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின்  முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கின் 130வது பிறந்தநாளை நினைவுகூரும் கருத்தரங்கில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாய்நாடு “மீண்டும் இணைக்கப்பட வேண்டும், தவிர்க்க முடியாமல் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 2025 அல்லது 2027 இல் தைவானைக் கைப்பற்ற ஷி திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைவர்களின் பொதுக் […]

இலங்கை

சிவனொளிபாத மலை யாத்திரை தொடர்பில் விசேட வர்த்தமானி

இன்று ஆரம்பமான சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயற்பாடுகள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றறைய பூரணை தினத்தில் ஆரம்பமானது. இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் 10 முக்கிய விடயங்களைக் கொண்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்று முதல் அடுத்த வருடம் மே மாதம் […]

இலங்கை

19ம் ஆண்டு நினைவு;உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்

  • December 26, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சுனாமி நினைவேந்தல் வளாகத்தில் இன்று சுனாமி நினைவேந்தலினுடைய 19 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது. காலை 8 மணிக்கு இந்துமத வழிபாடுகள் இடம்பெற்றது. இந்துமத வழிபாடுகளை முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகர் கிருசாந் ஐயா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து இஸ்லாமிய மத வழிபாடுகள் 8.15 […]

error: Content is protected !!