உலகம்

சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது, ஒருவரும் தப்பிக்க முடியாது – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாபெரும் மக்கள் பேரணி குருணாகல், நிகவரெட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

செல்வாக்கு மிக்க நபர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள, சாதாரண குடிமக்கள் மட்டும் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டியவில் இன்று (11) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு தனிநபரோ அல்லது இடமோ சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது என்றொரு பேச்சு உண்டு. சட்டம் ஒருபோதும் தங்களை நெருங்காது என்று சிலர் நம்பினர். சிறிய பூச்சிகள் அந்த வலையில் சிக்கிக்கொள்ளும், ஆனால் பெரிய பூச்சிகள் அதை உடைத்துக்கொண்டு தப்பித்துவிடும்.

“குறிப்பிட்ட சிலரைச் சட்டம் நெருங்க முடியாது என்ற எண்ணம் இந்நாட்டில் நிலவியது. சட்டம் அவர்களை நெருங்க முற்படும்போது, ​​அது எரிக்கப்பட்டுவிடும் என்ற நிலை இருந்தது. இலங்கையில் அந்த நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. சட்டம் தங்களை நெருங்க முடியாது என்று யாராவது நம்பியிருந்தால், சட்டம் செல்ல முடியாத இடமோ அல்லது அதன் பிடிக்கு அப்பாற்பட்ட தனிநபரோ இல்லை என்பதை நாங்கள் இப்போது நிரூபித்து வருகிறோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, சிறைச்சாலை தொடர்பான நிகழ்வுகளுக்கெனத் தனியானதொரு செய்திப் பகுதியை ஒதுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“இப்போதெல்லாம் சிறைச்சாலைச் செய்திகளுக்கெனத் தனியானதொரு பகுதி தேவைப்படுகிறது. ஒரு செய்தி வருகிறது, அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொன்று வருகிறது. இம்முறை அது யார் என்று நாங்களும் ஆச்சரியப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி திஸாநாயக்க, எந்தவொரு தரப்பினரின் அழுத்தத்திற்கும் அடிபணியாமல் அரசாங்கம் ஒரு சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

இராணுவ விமானங்களை இலங்கையில் தரையிறக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும், போர்க்கப்பல்களை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈரானியக் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவுகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்