இந்தியா இலங்கை செய்தி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கை ஒருபோதும் மாறாது

“இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் தரை மற்றும் வான் பரப்பைப் பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் தரை மற்றும் வான் பரப்பைப் பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்போம் எனத் தமிழகத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கே உள்ளது என உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. சண்டை பிடித்துக்கொண்டு அல்ல, சிறப்பான உறவு மூலமே இந்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

நிகவரெட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு:

“உலகம் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் ஒப்பந்தங்களில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவே, வெளிநாடுகளுடன் நெருக்கமான – சுமூகமான உறவு அவசியம். சர்வதேச உறவின்றித் தனித்து வாழ முடியாது.

நாம் சிறியதொரு நாடு; உலகில் நடக்கும் போர்களின்போது ஒரு பக்கம் சேர்ந்து மற்றொரு பக்கத்தை எதிர்க்க முடியாது. அணிசேராக் கொள்கையிலேயே நாம் பயணிக்கின்றோம்.

அமெரிக்கா – ஈரான் போரின்போது அமெரிக்க விமானங்கள் இங்கு தரையிறங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

ஈரான் கப்பல்கள் இலங்கை வருவதற்கு அனுமதி கோரின. முடியாது என நாம் குறிப்பிட்டோம்.எவருக்கும் அடிபணியாமல் சுயாதீனமான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றோம்.

ஈரான் கப்பல் விவகாரத்தில் சர்வதேசம் மதிக்கும் முடிவை எடுத்தோம்.இந்தப் பிராந்தியத்தில் இந்தியா மிக முக்கியம். எனவே, அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் தரை மற்றும் வான் பரப்பைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அனைத்து நாடுகளுடனும் சுமுக உறவு பேணப்படும்” என்றார் ஜனாதிபதி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை