தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாபெரும் மக்கள் பேரணி குருணாகல், நிகவரெட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினார். உலகம்

சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது, ஒருவரும் தப்பிக்க முடியாது – ஜனாதிபதி

  • October 11, 2026
  • 0 Comments

செல்வாக்கு மிக்க நபர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள, சாதாரண குடிமக்கள் மட்டும் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நிகவெரட்டியவில் இன்று (11) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு தனிநபரோ அல்லது இடமோ சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், “சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது என்றொரு பேச்சு உண்டு. சட்டம் ஒருபோதும் தங்களை நெருங்காது என்று […]