பிரித்தானியா தூதுவருக்கு ஈரான் அழைப்பாணை
அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின் முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், மேற்படி சம்பவம் தொடர்பில் தமது நாடுமீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஈரான், எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக பிரித்தானிய தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி 25 வயதான அந்த நபர் கடந்த […]













