ஐரோப்பா செய்தி

பிரித்தானியா தூதுவருக்கு ஈரான் அழைப்பாணை

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், மேற்படி சம்பவம் தொடர்பில் தமது நாடுமீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஈரான், எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக பிரித்தானிய தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

மேற்கு பிரித்தானியாவில் உள்ள  RAF Fairford  விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி 25 வயதான அந்த நபர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஈரானில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் இந்த விமானப்படைத் தளத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், லண்டனில் உள்ள இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்று வேன்களுடன் நடமாடிய 20 வயது மதிக்கத்தக்க ஐந்து பிரித்தானிய இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வேன்களில் பெற்றோல் மட்டுமே இருந்ததாகவும், வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்சதித்திட்டத்தில் வெளிநாடு ஒன்றின் தலையீடு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இச்சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பிருக்கலாம் எனப் பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஈரான் அரசு, இவை ஆதாரமற்றவை எனக் கூறி டெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி