இந்திய விமானியின் துணிச்சலை பாராட்டிய துபாய் இளவரசர்
flydubai FZ1073 விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாரை (Captain Smit Machchhar) துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
நடந்த ஆபத்தான சம்பவத்தின் போது, சாதுரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியதற்காக அவரது சிறந்த சேவையைப் பாராட்டி இளவரசர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்திய விமானியை தாக்கிவிட்டு, விமானத்தை வீழ்த்துவதற்கு முற்பட்ட ஓமன் நாட்டு துணை விமானியிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. மேற்படி சம்பவம் பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.




