பிராந்திய பாதுகாப்பு குறித்து ஈராக், அமெரிக்கா பேச்சு
பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi) மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் டொம் பாரக் (Tom Barrack) ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். திங்கள்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இச்சந்திப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள டொம் பாரக், ஈராக் பிரதமரின் “தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மைக்கு” தனது நன்றியை தெரிவித்துள்ளார். […]













