ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் காயம்
ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
டோக்கியோவிற்கு மேற்கே உள்ள ஷிஜுவோகா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுக்கோளில் 5.7 ஆகபதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் சேவைகள் தடைபட்டன என்று அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.




