இந்தியா செய்தி

தடையை மீறி போராட முற்பட்ட CJP தலைவர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர்.

டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் பகுதியை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அரசாங்கம் தடையடைக்கப்பட்டப் பகுதியாக (De-notified) அறிவித்திருந்தது.

அதற்கு மாற்றாக 3 புதிய இடங்களை டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடையை மீறி இன்று காலை CJP
கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட முயன்றனர். அப்போது பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள CJP நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே, பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு, “மக்களின் எதிர்ப்புக் குரல்களை அரசாங்க அறிவிப்புகள் மூலம் ஒருபோதும் தடை செய்ய முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போராட்டம் நடத்துவதற்கான இடத்தை ரத்து செய்வதன் மூலம் போராட்டங்களை முடக்கிவிட முடியாது என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய ஜந்தர் மந்தர்கள் உருவாகும் என்றும் CJP தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி