இந்தியா செய்தி வணிகம்

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்: IMF கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றுள்ளதுடன், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வுகூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றுள்ளதுடன், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வுகூறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் மந்தநிலை காணப்பட்டாலும், இந்தியாவின் உறுதியான உள்நாட்டுத் தேவை மற்றும் சேவைகள் துறையின் (Services activity) வலுவான செயல்பாடு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மீள்தன்மையுடன் வளர்ச்சியடைந்து வருகிறது.

நடப்பாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8 சதவீதமாகப் பதிவானதை அடுத்து, உலக வங்கி, ஓஇசிடி (OECD), எஸ் அண்ட் பி (S&P), மூடிஸ் (Moody’s) உள்ளிட்ட பல உலகளாவிய நிறுவனங்களும் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடுகளை உயர்த்தியுள்ளன.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் போன்ற காரணிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி