இந்தியா செய்தி

சவூதிக்கான விமான சேவை ரத்து-IndiGo நிறுவனம் அறிவிப்பு

சவூதி அரேபியாவின் 4 நகரங்களுக்கான விமான சேவைகளை இந்தியாவை சேர்ந்த இண்டிகோ (IndiGo) நிறுவனம் ரத்து செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் 4 நகரங்களுக்கான விமான சேவைகளை இந்தியாவை சேர்ந்த இண்டிகோ (IndiGo) நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின்படி, சவூதி அரேபியாவின் ரியாத், ஜித்தாவ், தம்மாம் மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானங்களின் நிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அந்நிறுவனம் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சவூதி அரேபியாவுக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்திருந்த நிலையில், திங்கள்கிழமை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் சவூதிக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு தம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி