“ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்வரை நாம் ஓயமாட்டோம். விகாரமஹாதேவி பூங்காவில் இருப்போம். அங்கிருந்து விரட்டினால் வேறு இடத்துக்கு செல்வோம்.” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஞானசார தேரரை விடுவிக்கும்வரை கொழும்பில் இருந்து நகரமாட்டோம்

  • October 17, 2026
  • 0 Comments

“ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்வரை நாம் ஓயமாட்டோம். விகாரமஹாதேவி பூங்காவில் இருப்போம். அங்கிருந்து விரட்டினால் வேறு இடத்துக்கு செல்வோம்.” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார். எமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கொழும்பில் எல்லா இடங்களிலும் இருப்போம் எனவும் அவர் கூறினார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தியும், அவரின் துறவற ஆடை அகற்றப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட […]

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைப்பு

  • October 17, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது கையளிக்கப்பட்டவேளை, அடுத்த அமர்விலேயே விவாதத்துக்கு தயார் என ஆளுங்கட்சி அறிவித்திருந்தது. எனினும், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் கூடுகின்றது. மேற்படி திகதிகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள சில குளறுபடிகள் காரணமாகவே அதன்மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என […]

காசா சமூக ஆர்வலர்களை நடத்திய விதம் தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Israel Katz , சிரேஷ்ட ராணுவ, காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக இத்தாலியில் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக இத்தாலியில் விசாரணை ஆரம்பம்

  • October 16, 2026
  • 0 Comments

காசா சமூக ஆர்வலர்களை நடத்திய விதம் தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Israel Katz , சிரேஷ்ட ராணுவ, காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக இத்தாலியில் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் காசாவை நோக்கிச் சென்ற சிறிய படகுக் குழுக்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தபோது, சித்திரவதை, கடத்தல், தனிநபர் காயம், கொள்ளை மற்றும் சேதம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கு இதுவென்று இத்தாலி அரசு […]

நாடாளுமன்றம் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் நிர்ணயம்

  • October 16, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (16) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.30மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு […]

தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைக் ஏந்தியவாறு மூவர்ணக் கொடிப் பேரணியை (Tiranga Rally) நடத்தியுள்ளனர். இந்தியா செய்தி

தடைகளைத் தாண்டி டெல்லியில் மூவர்ணக் கொடி போராட்டம் முன்னெடுப்பு

  • October 16, 2026
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைக் ஏந்தியவாறு மூவர்ணக் கொடிப் பேரணியை (Tiranga Rally) நடத்தியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி CJP அமைப்பினர் இன்று (அக். 16) மாலை டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இப்பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ளச் […]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் இன்று கையளிக்கப்பட்டன. இலங்கை செய்தி

யாழில் படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

  • October 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் இன்று கையளிக்கப்பட்டன. பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் நிசங்க, இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் ஒப்படைத்தார். இதற்கமைய வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி […]

“ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல.” என்று அமைச்சர் லால்காந்த இன்று அறிவித்தார்.  இலங்கை செய்தி

பொதுமன்னிப்பு வழங்க முடியாது: அரசாங்கம் திட்டவட்டம்

  • October 16, 2026
  • 0 Comments

“ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல.” என்று அமைச்சர் லால்காந்த இன்று அறிவித்தார். “மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசாங்கம் முடிவுகளை எடுத்துவருகின்றது. நடை பயணம் வந்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல. அவ்வாறு நிறைவேற்றினால் அது மக்கள் ஆணையை மீறுவதாக அமையும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம், நீதிமன்ற உத்தரவு, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட முடியாது எனவும் அவர் […]

அடுத்த ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட இடைவெளியை சரிசெய்யவும், ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய கடன் உதவி வழங்க வேண்டியிருக்கும் என்று எஸ்டோனியப் பிரதமர் கிறிஸ்டன் மைக்கல் (Kristen Michal) தெரிவித்தார். செய்தி முக்கிய செய்திகள்

போரை முன்னெடுக்க உக்ரைனுக்கு ஐரோப்பாவின் கடன் அவசியம்

  • October 16, 2026
  • 0 Comments

அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட இடைவெளியை சரிசெய்யவும், ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய கடன் உதவி வழங்க வேண்டியிருக்கும் என்று எஸ்டோனியப் பிரதமர் கிறிஸ்டன் மைக்கல் (Kristen Michal) தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் தொடங்குவதற்கு முன்பாகப் பேசிய மைக்கல், “ஐரோப்பிய நிதி உதவி அங்கு இருந்தாக வேண்டும்,” என்று கூறினார். “இந்த நீண்டகாலப் போரில் நிதி உதவியே அடிப்படையான ஒன்றாகும். […]

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இலங்கை செய்தி

செம்மணிப் புதைகுழி குறித்த முக்கிய அறிக்கை திங்கள் சமர்ப்பிப்பு

  • October 16, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 540 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலான தொல்லியல் ஆய்வை பேராசிரியர் ராஜ் சோமதேவா மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வின் அறிக்கையே பேராசிரியரால் வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரியவருகின்றது. இந்த அறிக்கையில் குறித்த உடல்களின் இறப்புக்கான காரணம் மற்றும் […]

நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பங்களாதேஷ் பாணியிலான ஆட்சி மாற்றத்தை (Bangladesh-style regime change) கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயல்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

பங்களாதேஷ் பாணியில் இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி

  • October 16, 2026
  • 0 Comments

நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பங்களாதேஷ் பாணியிலான ஆட்சி மாற்றத்தை (Bangladesh-style regime change) கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயல்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து லக்னோவி ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” அரசியல் மோதல்களுக்காக நாட்டின் இளைஞர்களை எதிர்க்கட்சிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயல்கின்றன. வங்கதேச நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சிலர் ஆட்சி […]