இந்தியா செய்தி

தடைகளைத் தாண்டி டெல்லியில் மூவர்ணக் கொடி போராட்டம் முன்னெடுப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைக் ஏந்தியவாறு மூவர்ணக் கொடிப் பேரணியை (Tiranga Rally) நடத்தியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைக் ஏந்தியவாறு மூவர்ணக் கொடிப் பேரணியை (Tiranga Rally) நடத்தியுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி CJP அமைப்பினர் இன்று (அக். 16) மாலை டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இப்பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லவிருந்த சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் திப்கேவை அவர் தங்கியிருந்த வீட்டில் பொலிஸார் தடுத்து நிறுத்தித் தடுப்புக் காவலில் அடைத்தனர். இதேபோல், மாண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து பேரணியாகச் சென்ற மாணவர் அமைப்புத் தலைவர் நேஹா போராவும் கைது செய்யப்பட்டார்.

போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், தடையை மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மூவர்ணக் கொடியுடன் பேரணியைத் தொடர்ந்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி