இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உலகம் செய்தி

ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

  • August 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்காக இவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் திட்டமிட்டதால் இவர் குறிவைக்கப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 தாக்குதலில் பங்கேற்ற ஒவ்வொரு பயங்கரவாதியையும் கண்டறிந்து அழிக்கும் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கையின் […]

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும் நீடிக்கும் நீதிமன்ற திருத்தச் சட்டமூலமும் அன்றைய நாளில் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சில சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையிலேயே திட்டமிட்டப்படி சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் […]

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு

  • August 14, 2026
  • 0 Comments

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார். டித்வா […]

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான போர் தோல்வி: நோர்வே வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் போர் தனது தொடக்க நோக்கங்கள் எதையுமே அடையவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகின்றது. மேலும், இதன் மூலம் ஈரானின் தீவிரப் போக்காளர்கள் பலவீனமடைவதற்குப் பதிலாக […]

இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக இந்த சேவை இடம்பெறும் என விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க மற்றும் வியட்நாமின் Ho Chi Minh நகருக்கு இடையில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் […]

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலகம் செய்தி

ஜப்பானில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கன மழை: நால்வர் பலி

  • August 14, 2026
  • 0 Comments

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வரலாறு காணாத இந்த கனமழையினால், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோவின் நரிட்டா (Narita) சர்வதேச விமான நிலையத்தில் 7,000 பயணிகள் இரவு முழுவதும் முடங்கிப்போயினர். வியாழக்கிழமையன்று உள்ளூர் அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான ‘லெவல் 5’ (Level 5) அவசரக்கால எச்சரிக்கையை […]

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இந்தியாவின் சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  • August 14, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 80வது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார். மேலும், தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக, செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியின் போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, […]

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார். மேலும், […]

ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர்நிறுத்தப் பேச்சு முடக்கம்: ஈரான்மீது வரலாறு காணாத பொருளாதாரத் தடை

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து குறைந்து வருவதோடு, பிராந்திய பதற்றமும் அதிகரித்துள்ளது. கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஈரானும் ஹோர்முஸ்நீரிணை பகுதியில் முற்றுகையை அமல்படுத்தி வருகிறது. மேலும், அவ்வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ளது. போருக்கு முன்னர் […]

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்​பாக அவர் எழு​திய கடிதத்​தில், ” ஆகஸ்ட் 12 இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த […]