ஆஸ்திரேலியக் கடற்படையில் அதிர்ச்சி சம்பவம்: விசாரணை முன்னெடுப்பு
ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் பெண்களுக்கான குளியலறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணொளிப் பதிவு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படை முழுவதிலும் உள்ள குளியலறை வசதிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரிடையே பணியிடப் பாதுகாப்பு மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவர் விசாரணைக்குரிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது? குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்குப் […]













