இலங்கை செய்தி

யாழில் படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் இன்று கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் இன்று கையளிக்கப்பட்டன.

பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் நிசங்க, இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் ஒப்படைத்தார்.

இதற்கமைய வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் இவ்வாறு உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை