இஸ்ரேல் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி

முழுமையான விசாரணைக்கு இஸ்ரேல் ஜனாதிபதி வலியுறுத்து

  • October 29, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, இந்த விவகாரத்துக்காக ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹெர்சோக் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் தேர்தல்களின் நேர்மை […]

இஸ்ரேலிய தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் எந்தவொரு கூட்டணியையும் அமைக்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தேர்தலில் வெளிநாட்டு தலையீடா? இஸ்ரேலில் வெடித்த புதிய சர்ச்சை

  • October 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் எந்தவொரு கூட்டணியையும் அமைக்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குச் சாதகமாக வெளிநாட்டுத் தரப்பினர் தலையிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிய நெதன்யாகு, இந்த விவகாரத்தை “ரா ஆம் கேட் விவகாரம் ஒரு பூகம்பம் போன்றது” என வர்ணித்துள்ளார். இந்தத் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேலின் […]

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள மெதகம பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. இலங்கை செய்தி

என்பிபி ஆட்சிக்குட்பட்ட பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு

  • October 29, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள மெதகம பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் அஜித் பிரியந்த ரத்நாயக்க தலைமையில் இன்று காலை நடைபெற்ற சபை அமர்வில், அவர் வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சபையில் சமர்ப்பித்து விவாதத்துக்கு எடுத்துக்கொண்டார். இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு–செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக எட்டு உறுப்பினர்களும் எதிராக ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி , சர்வஜன பலய, ஸ்ரீலங்கா […]

முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

விஜயதாச ராஜபக்சவின் மகனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

  • October 29, 2026
  • 0 Comments

முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்னெடுத்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை வழங்குவதற்காக, ஒக்டோபர் 28ஆம் திகதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவலையில் அமைந்துள்ள ரகித ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்றுள்ளது. எனினும், […]

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளைக் முன்வைத்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை (30) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

பல்கலை விரிவுரையாளர்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

  • October 29, 2026
  • 0 Comments

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளைக் முன்வைத்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை (30) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் என FUTA பொதுச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை, தற்போது பணியாற்றும் விரிவுரையாளர்கள் மீது சுமத்தப்படும் அதிகப்படியான பணிச்சுமை, போதிய வளங்களின்மை மற்றும் போதுமான […]

யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக, ஓகஸ்ட் மாத ஆரம்பம் முதல் 281,000-க்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

யேமனில் மோதல்: 2.8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு – ஐ.நா.

  • October 29, 2026
  • 0 Comments

யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக, ஓகஸ்ட் மாத ஆரம்பம் முதல் 281,000-க்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், இந்த இடம்பெயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக, மனிதாபிமான உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகரித்த சிரமங்கள் நிலவுவதாக OCHA தெரிவித்துள்ளது. தாயிஸ் நகரை […]

அமெரிக்காவுடனான போர் எட்டாவது மாதமாகத் தொடரும் நிலையில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உலகம் செய்தி

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி: திண்டாடும் மக்கள்

  • October 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போர் எட்டாவது மாதமாகத் தொடரும் நிலையில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு வாடகைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், மக்களின் கொள்வனவு சக்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் சேமிப்புகள் குறைந்து வருதல் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், மில்லியன் கணக்கான மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, […]

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு ட்ரம்ப் திட்டம்?

  • October 29, 2026
  • 0 Comments

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அமெரிக்காவில் முக்கிய தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அவரது இந்த எச்சரிக்கைகளும், சாத்தியமான பதிலடி நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள புதிய அறிவுறுத்தல்களும், பிராந்தியத்தில் மீண்டும் பெரிய அளவிலான இராணுவ […]

மத்திய அரசு உத்​தர​வின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்​கு​களும் பதிவு​களும் தொடர்ந்து முடக்​கப்​பட்டு வரு​வ​தாக கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே குற்​றம்​சாட்​டியுள்​ளார். இந்தியா செய்தி

சமூகவலைத்தள கணக்குகள் முடக்கம்: CJP சீற்றம்

  • October 29, 2026
  • 0 Comments

மத்திய அரசு உத்​தர​வின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்​கு​களும் பதிவு​களும் தொடர்ந்து முடக்​கப்​பட்டு வரு​வ​தாக கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே குற்​றம்​சாட்​டியுள்​ளார். அதேநேரம், சமூக வலை​தளக் கணக்​கு​களை முடக்​கு​வ​தால் மக்​களின் கேள்​வி​கள் மறைந்​து​விடாது என்​றும், இளைஞர் வேலை​வாய்ப்​பின்மை, ஆட்சி நிர்​வாகக் கோளாறுகள் மற்​றும் பொது உள் கட்​டமைப்பு சார்ந்த பிரச்​சினைகளுக்​குத் தணிக்கை ஒருபோதும் தீர்​வாகாது என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார். இளைஞர்​களின் வேலை​வாய்ப்​பின்மை மற்​றும் நிர்​வாகப் பிரச்சினைகள் குறித்​துக் கேள்வி எழுப்​பும் இன்ஸ்டாகிராம் கணக்கு​களைக் […]

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், ஆயுதப் படைகளுக்குக் பொலிஸ் அதிகாரங்களை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், எச்சரித்துள்ளார். செய்தி

ஆயுதப் படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது ஆபத்து

  • October 29, 2026
  • 0 Comments

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், ஆயுதப் படைகளுக்குக் பொலிஸ் அதிகாரங்களை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், எச்சரித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான தெளிவான வரையறை இல்லாததால், இது சிவில் உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். 1979-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை’ மாற்ற வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும், […]