இந்தியா செய்தி

சமூகவலைத்தள கணக்குகள் முடக்கம்: CJP சீற்றம்

மத்திய அரசு உத்​தர​வின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்​கு​களும் பதிவு​களும் தொடர்ந்து முடக்​கப்​பட்டு வரு​வ​தாக கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

மத்திய அரசு உத்​தர​வின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்​கு​களும் பதிவு​களும் தொடர்ந்து முடக்​கப்​பட்டு வரு​வ​தாக கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

அதேநேரம், சமூக வலை​தளக் கணக்​கு​களை முடக்​கு​வ​தால் மக்​களின் கேள்​வி​கள் மறைந்​து​விடாது என்​றும், இளைஞர் வேலை​வாய்ப்​பின்மை, ஆட்சி நிர்​வாகக் கோளாறுகள் மற்​றும் பொது உள் கட்​டமைப்பு சார்ந்த பிரச்​சினைகளுக்​குத் தணிக்கை ஒருபோதும் தீர்​வாகாது என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இளைஞர்​களின் வேலை​வாய்ப்​பின்மை மற்​றும் நிர்​வாகப் பிரச்சினைகள் குறித்​துக் கேள்வி எழுப்​பும் இன்ஸ்டாகிராம் கணக்கு​களைக் கட்​டுப்​படுத்​து​மாறு தகவல் தொழில்​நுட்​பச் சட்டத்​தின் பிரிவு 69A-ன் கீழ் மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் தெரி​விக்​கின்​றன. இத்​தகைய கணக்கு முடக்​கங்​கள் குறித்து செயற்​பாட்​டாளர்​களும் அரசி​யல் அமைப்​பு​களும் கடும் கவலை தெரி​வித்​துள்​ளன.

இதனிடையே, மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களுக்​குப் பதிலாக மீண்​டும் வாக்​குச்​சீட்டு முறையைக் கொண்​டுவர வலியுறுத்தி ‘இவிஎம்-ஐ அகற்று, தேசத்​தைக் காப்​பாற்று’ என்ற முழக்​கத்​துடன் ‘மிஷன் சேவ் கான்ஸ்டி​டியூஷன்’ அமைப்பு செயல்பட்டு வரு​கிறது.

இவ்​வ​மைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் வழக்கறிஞர் மெஹ்​மூத் பிராச்​சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்​கப்​பட்​டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி