உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தேர்தலில் வெளிநாட்டு தலையீடா? இஸ்ரேலில் வெடித்த புதிய சர்ச்சை

இஸ்ரேலிய தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் எந்தவொரு கூட்டணியையும் அமைக்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் எந்தவொரு கூட்டணியையும் அமைக்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குச் சாதகமாக வெளிநாட்டுத் தரப்பினர் தலையிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிய நெதன்யாகு, இந்த விவகாரத்தை “ரா ஆம் கேட் விவகாரம் ஒரு பூகம்பம் போன்றது” என வர்ணித்துள்ளார்.

இந்தத் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேலின் மத்திய தேர்தல்கள் குழுத் தலைவர் நீதிபதி நோம் சோல்பெர்க், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் அமைப்பின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு நிதி மூலம் தேர்தலில் முறைகேடான செல்வாக்குச் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடிவுகளை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், அரபுக் கட்சிகளின் தலைவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விரும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

எனினும், தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த விசாரணையைப் பயன்படுத்தி புதிய நாடாளுமன்றத்தின் பதவியேற்பைத் தாமதப்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் எச்சரித்துள்ளார்.

தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரபுக் கட்சிகளின் ஆதரவு அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி