இந்தியா செய்தி

கரப்பான்பூச்சி ஜனநாயக் கட்சியினரைக் கலைக்க தடியடி

  • July 20, 2026
  • 0 Comments

இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான […]

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு நாளை 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எனவே, 21 ஆம் திகதி கையளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வாரத்துக்குள் நிச்சயம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நீர் கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை மையப்படுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அவசர விடயமாக கருதி இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்கள்?

  • July 20, 2026
  • 0 Comments

நாட்டில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “கொழும்பு துறைமுக நகரம், தாமரை கோபுரம், நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணித்தது யார் அல்லது முப்பதாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு […]

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் வந்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். செய்தி விளையாட்டு

ட்ரம்ப், FIFA தலைவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சல்

  • July 20, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் வந்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி டிரம்ப் மற்றும் FIFA தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோர், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வீரர்கள் […]

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, இந்தியாவில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் 'காக்ரோச்' (Cockroach Movement) அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல இன்று புதுடெல்லியில் திரண்டனர். இந்தியா செய்தி

மோசடி அரசுக்கு தலையிடியாக மாறியுள்ள “கரப்பான் பூச்சி” இயக்கம்

  • July 20, 2026
  • 0 Comments

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, இந்தியாவில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘காக்ரோச்’ (Cockroach Movement) அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல இன்று புதுடெல்லியில் திரண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், அவருக்கு எதிராக உருவெடுத்துள்ள மிகப்பெரிய மக்கள் சவாலாக இந்த இயக்கம் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள இந்த இயக்கம், களத்திலும் வலுவான ஆதரவைத் திரட்டி வருகிறது. போராட்டம் தீவிரமடைந்தது ஏன்? கடந்த […]

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் இரு எண்ணெய் விநியோகக் கப்பல்கள் வெடித்துச் சிதறி முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்: உச்சக்கட்டத்தை எட்டிய அமெரிக்க – ஈரான் மோதல்

  • July 20, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் இரு எண்ணெய் விநியோகக் கப்பல்கள் வெடித்துச் சிதறி முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணையின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காகப் “புதிய அலைத் தாக்குதல்களைத்” (New wave of strikes) தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (U.S. […]

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது

  • July 20, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 18-ம் திகதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யிடம் […]

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்ற தருணத்தில், 19 வயதான நட்சத்திர வீரர் லாமின் யமாலின் (Lamine Yamal) மிகப்பெரிய ரசிகரான அவரின் 3 வயது தம்பி மைதானத்திற்குள் ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. செய்தி விளையாட்டு

ஆடு களத்தில் பாசமழை: தம்பியைக் கட்டியணைத்து வெற்றியைக் கொண்டாடிய லாமின் யமால்

  • July 20, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்ற தருணத்தில், 19 வயதான நட்சத்திர வீரர் லாமின் யமாலின் (Lamine Yamal) மிகப்பெரிய ரசிகரான அவரின் 3 வயது தம்பி மைதானத்திற்குள் ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்குப் பிறகு, சிவப்பு நிற ஸ்பெயின் சீருடை அணிந்து, கையில் உலகக்கோப்பை கோல் வலையின் சிறு […]

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: ரணில், சஜித் நேரடி சந்திப்பு

  • July 20, 2026
  • 0 Comments

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார். சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் […]

இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதை குழி: நீதிகோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்

  • July 20, 2026
  • 0 Comments

இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘தமிழீழ ஆதரவு இயக்கம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் குறித்துச் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்குக் […]