இலங்கை இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இந்தியா இலங்கை செய்தி

இலங்கை இராணுவத்திற்கு AI ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா

  • September 10, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் உதயகிரியில் நேற்றிரவு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே,இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதிர்காலத்தில் இலங்கை ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த செயற்கை நுண்ணறிவு […]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரை, ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச […]

சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, 'மெக்கா ஒப்பந்தத்தின்' கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சவுதிக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த களமிறங்குமா பாகிஸ்தான்?

  • September 10, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘மெக்கா ஒப்பந்தத்தின்’ கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்லாமாபாத் எவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுப்பப்பட்ட […]

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. உலகம் செய்தி

நேபாளத்தில் பேரழிவு: $20.5 மில்லியன் அவசர நிதியுதவி கோருகிறது IOM அமைப்பு

  • September 10, 2026
  • 0 Comments

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, சுமார் 4,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தேசிய பேரிடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் மேலாண்மை அதிகாரசபை (NDRRMA) தெரிவித்துள்ளது. இப்பேரிடரால் வீதிகள், பாலங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, வாழ்வாதார இழப்புகளுடன் நிச்சயமற்ற […]

தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார். இந்தியா செய்தி தமிழ்நாடு

256வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

  • September 10, 2026
  • 0 Comments

தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார். தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான அன்று, 65 வயதான பத்மராஜன் தனக்கு உகந்த நேரமாகக் கருதி காலை 11.05 மணிக்குத் தனது மனுவை […]

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

  • September 10, 2026
  • 0 Comments

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். மாநாட்டின் பாதுகாப்பிற்காக 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 4,800க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் முக்கியப் பகுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் […]

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலி போர்க் கப்பல்

  • September 10, 2026
  • 0 Comments

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தில், கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் இத்தாலிய போர்க்கப்பலை வரவேற்றனர். 180 மீற்றர் நீளமான இந்த விமானம் தாங்கிக் கப்பலில் 550 கடற்படை மாலுமிகளும், 150 விமானப்படை பணியாளர்களும், 100 அதிகாரிகளுமாக 830 பேர் பணியாற்றுகின்றனர். இந்த விமானம்தாங்கிக் […]

சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு (Alexander Csergo) மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன உளவு அமைப்புக்கு அறிக்கை அளித்த ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கு சிறை!

  • September 10, 2026
  • 0 Comments

சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு (Alexander Csergo) மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவனக்குறைவான வெளிநாட்டு தலையீட்டுக் குற்றச்சாட்டின் (reckless foreign interference) கீழ் ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எனினும், ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதமே அவர் பிணையில் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 […]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை செய்தி

ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு ரத்து

  • September 10, 2026
  • 0 Comments

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) ஆகியவை முன்னாள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த,நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற […]

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு

  • September 10, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இங்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய […]