Reform UK கட்சிக்கு நெருக்கடி: முக்கிய இரு பிரமுகர்கள் ராஜினாமா
பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவர் மூலம் அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற வழிவகை செய்து, நாட்டின் தேர்தல் சட்டத்தை இக்கட்சி மீறியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கட்சி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளதோடு, காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்திற்கே (Hoax) […]













