உலகம் செய்தி

உச்சத் தலைவரின் இறுதிச் சடங்கு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜுலை 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறும் என்று ஈரான் அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவரது மகன் முஜ்தபா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 70 இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • June 13, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இந்த வான்வழித் தாக்குதல்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிர்த்தரப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மோதலில் பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஐந்து பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் இந்தத் […]

இலங்கை செய்தி

பிரபாகரனின் இளைய மகன் குறித்து டக்ளஸ் பரபரப்பு தகவல்

  • June 13, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா […]

இலங்கை செய்தி

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • June 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீரெனக் காணாமல்போயுள்ளார். இது குறித்துக் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல்களின் போது, சிறுவனின் வீட்டுக்கு […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் சுவிஸில் கைச்சாத்து: பாகிஸ்தான் ஏற்பாடு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது. அமெரிக்கா […]

செய்தி பொழுதுபோக்கு

செப்டம்பர் 04 திரைக்கு வருகிறது ‘மண்டாடி’!

  • June 13, 2026
  • 0 Comments

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படம் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதலீடு செய்ய அணிதிரளும் சீன நிறுவனங்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பு துறைமுக […]

இந்தியா செய்தி

தீவிரமடைகிறது ‘எல் நினோ’!

  • June 13, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் ‘எல் நினோ’ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு […]

இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்குகிறது ஐ.நா.குழு!

  • June 13, 2026
  • 0 Comments

சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. உபகுழு UN Subcommittee on Prevention of Torture (SPT) ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம்தெரிவித்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக் கூடிய பிற இடங்களில் உள்ள மக்களுக்கான சீர்திருத்தங்களையும் பாதுகாப்புகளையும் அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை மதிப்பிடுவதே […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு மரண தணடனை?

  • June 13, 2026
  • 0 Comments

“ உரிய சட்ட அணுகுமுறையின் பிரகாரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, சுரேஷ்ச லே குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனைக்கூட வழங்கலாம். அதனை நாம் எதிர்க்கமாட்டோம். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ்சலே தடுப்புகாவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார். அவர் குற்றவாளியெனில் மரண தண்டனை விதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் அவர் தற்போது சந்தேகநபர். குற்றவாளியென […]