கருத்து & பகுப்பாய்வு

போரில் திருப்பம் – ஈரானுக்கு கைக்கொடுக்கும் ரஷ்யா, வலுவடையும் இராணுவ உறவு

  • September 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அளவுக்கு வேகமான, சக்திவாய்ந்த புதிய வகை குரூஸ் ஏவுகணையை உருவாக்குவதில் ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக உதவி வருவதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக பிரசூரித்துள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள குறித்த செய்தியில், C430L என அறியப்படும் ஒரு ரகசிய திட்டம் நீண்டகாலமாக பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக […]

ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா இன்று நடத்திய தாக்குதல்களில் 04 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆறாவது நாளாக தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது, மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இன்று அதிகாலை வேளையில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களுக்கான  எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர்களான […]

ஐரோப்பா

கீவ் மீது 05 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் – ரஷ்யா மும்முரம்

  • August 31, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ரஷ்ய இன்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இடைவிடாமல் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் ஒலித்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில் கீவ் பகுதியில் உள்ள கிடங்குகள், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் ஒரு சில்லறை விற்பனை நிலையம் சேதமடைந்ததாக பிராந்திய ஆளுநர் டைமூர் தகாசென்கோ தெரிவித்துள்ளார். இந்தத் தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உக்ரைனியர்களைச் சோர்வடையச் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் டீசல் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு

  • August 30, 2026
  • 0 Comments

டீசல் ஏற்றுமதி மீதான தடையை செப்டம்பர் மாதம 30 ஆம் திகதிவரை நீட்டித்து ரஷ்யா அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது. ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ச்சியான பற்றாக்குறை மற்றும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக விநியோகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதன் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில் உள்நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விநியோக சிக்கல் ஏற்பட்டுள்ளமை […]

ஐரோப்பா

உக்ரைனின் 09 நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்

  • August 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுமழை பொழிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம்  மொஸ்கோவின் அதிவேக ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்கள் மற்றொரு சவாலை ஏற்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உக்ரைனும் ரஷ்ய […]

ஐரோப்பா

ருமேனிய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்தது ரஷ்யா

  • August 27, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் உள்ள ருமேனிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரை விரும்பத்தகாத நபராக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்ய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவிக்க புக்கரெஸ்ட் முன்னதாக எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவின்  அமூர் இரசாய வளாகத்தில் தீ விபத்து – 06 சீனர்கள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவின்  அமூர் பகுதியில் உள்ள எரிவாயு இரசாயன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 சீன பிரஜைகள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 152 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன், அவர்களில் 36 பேர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அவசர விமான சேவை ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.      

ஐரோப்பா

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு அழுத்தம் – பிரான்ஸ் வலியுறுத்து

  • August 22, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் Kryvyi Rih ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து மக்ரோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 குழந்தைகள் உட்பட 130 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீதான இந்தத் தாக்குதல், […]

ஐரோப்பா

போர் அச்சம் – வங்கியில் இருந்து பணத்தை மீளப் பெறும் ரஷ்ய மக்கள்

  • August 19, 2026
  • 0 Comments

ரஷ்ய மக்கள் வங்கிகளில் வைப்பிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்,   சுமார் €24.4 பில்லியன் தொகையைத் மக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு நிதியளிப்பதற்காக கிரெம்ளின் தனியார் வைப்புத்தொகைகளை முடக்கவோ அல்லது தேசியமயமாக்கவோ கூடும் என்ற அச்சம் பரவியதால் மக்கள் இவ்வாறு பணத்தை மீளப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Banks.ru நிதிச் சந்தையின் தரவுகளின்படி, பணத்திற்கான தேவை மார்ச் மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து வருவதாக […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் குதித்த பிரித்தானியா : எச்சரிக்கும் ரஷ்யா

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியா தயாரித்த இரண்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரித்தானியா போரை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரித்தானியா […]