ரஷ்யாவின் அமூர் இரசாய வளாகத்தில் தீ விபத்து – 06 சீனர்கள் பலி
ரஷ்யாவின் அமூர் பகுதியில் உள்ள எரிவாயு இரசாயன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 சீன பிரஜைகள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
152 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன், அவர்களில் 36 பேர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அவசர விமான சேவை ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.




