ஐரோப்பா

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதி உதவி

  • August 5, 2026
  • 0 Comments

சமீபகாலமாக கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பங்கை உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய €1.4 பில்லியன் நிதி உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்தார். இந்த நிதியில் பெரும்பகுதி ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும், அதே நேரத்தில் €70 மில்லியன் இராணுவ […]

ஐரோப்பா

ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் – குறைந்தது 08 பேர் உயிரழப்பு

  • August 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான கிடங்கு உள்ளிட்ட இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று இரவு மாத்திரம் 635 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 13 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரு […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கோரத் தாண்டவம் – வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பிய போலந்து

  • July 30, 2026
  • 0 Comments

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று முன்னெடுத்த பாரிய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலின்போது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 280 ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை வரையிலும் கீவில் தாக்குதலுக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் இந்த கோரத் தாண்டவத்தை தொடர்ந்து போலந்தும் தங்களது வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை  பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளை சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, வரவிருக்கும் “ஒரு பெரிய தாக்குதல்” குறித்து  […]

ஐரோப்பா

மொஸ்கோவிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் – குடியிருப்பு கட்டடம் சேதம்

  • July 28, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில்   பிராந்திய அளுநர் வோரோபியோவ் (Vorobyov) டெலிகிராமில் , உடைந்த ஜன்னல்களுடனும், மேல் தளங்களிலிருந்து கருப்புப் புகை எழுவதையும் காட்டும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று செக்கோவ் நகர மேயர் மிகைல் சோபாகின்(Mikhail Sobakin) மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம் போடோல்ஸ்க் (Podolsk), டொமோடெடோவோ (Domodedovo) மற்றும் கொலோம்னா (Kolomna) உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளில் […]

ஐரோப்பா

போர்களத்தில் 30,000 வட கொரிய துருப்புக்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டம்

  • July 27, 2026
  • 0 Comments

போர்களத்தில் 30,000 வட கொரிய துருப்புக்களை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா கீவ் நகரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ள நிலையில் ஜெலன்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ரஷ்யா 221,000 பேரைப் படையில் சேர்த்துள்ள போதிலும், 225,500 உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும்  இதனால்  போர்க்களத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை ஈடுகட்ட படைதிரட்டல் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஷியாவில் விடுமுறை […]

ஐரோப்பா

“ரஷ்யாவுக்கு சந்தேகம் வேண்டாம் : பிரித்தானியா உக்ரைனுக்கு தோளோடு தோள் நிற்கிறது

  • July 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆண்டி பர்னம் இன்றைய தினம் (27.07) உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளார். இடைக்கால பிரதமராக பதவியேற்றப்பின் தனது முதல் சர்வதேச விருந்தினராக அவர் ஜெலென்ஸ்கியை வரவேற்கவுள்ளார். இது உக்ரைனுக்கான லண்டனின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒரு கடற்படைத் தளத்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பிரிட்டன் தலைமையிலான பயிற்சித் திட்டங்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், போர்க்களத்தில் முடிவுகளை வழங்கவும் […]

ஐரோப்பா

சபோர்ஷியாவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் தாக்குதல் – பொதுமக்கள் பலி

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் சபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், விடுமுறைக்கால முகாம்கள் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். உக்ரைன் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் சர்வதேச சட்டங்களை மீறி பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும் இரு நாடுகளும் இந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவின் வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்

  • July 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது தளவாட மையங்களில் ஒன்றில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம்  ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக கூறியே உக்ரைன் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் உக்ரைனின் இந்த கூற்றுக்களை […]

ஐரோப்பா

உளவு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாக இத்தாலிய தூதர்களை நாடு கடத்தி ரஷ்யா!

  • July 21, 2026
  • 0 Comments

உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னதாக இரண்டு ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய இத்தாலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா இரண்டு இத்தாலிய தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்து அவர்களை வெளியேற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றுவதால், அவற்றுக்கிடையேயான இருதரப்பு பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா, இத்தாலிய பாதுகாப்புத் தூதர் ஒருவரும் அவரது உதவியாளரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் தூதர் டேவிட் டி’அப்ரில் மற்றும் உதவி […]

ஐரோப்பா

கருங்கடலில் நிழல் கப்பற்படை கப்பல்களுக்கு குறி – ரஷ்யாவின் புதிய வியூகம்

  • July 17, 2026
  • 0 Comments

ரஷ்யா தங்களின் “நிழல் கப்பற்படை” கப்பல்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வான்வழித் தாக்குதல் எதிர்ப்புப் படையினரைக் கொண்டு ஆயுதம் ஏந்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக  உக்ரைனின் ஆளில்லா அமைப்புப் படைகள் (USF),  கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் இயங்கி வந்த 147 ரஷ்யக் கப்பல்களைத் தாக்கியுள்ளன. நேற்று இரவு மேலும் ஆறு கப்பல்கள் தாக்கப்பட்டன. உக்ரைனின் இந்த நடவடிக்கை காரணமாக ரஷ்யாவிற்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களின் கப்பல்கள் […]