உக்ரைன் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா இன்று நடத்திய தாக்குதல்களில் 04 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆறாவது நாளாக தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது, மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
இன்று அதிகாலை வேளையில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் “விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான” தொலைபேசி உரையாடலை நடத்தியதாகவும், அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் உக்ரைனுக்கான அவர்களின் பயணத்திற்கான தேதிகளை இறுதி செய்ய இரு தரப்பினரும் பணியாற்றி வருவதாகவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




