ஐரோப்பா

கீவ் மீது 05 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் – ரஷ்யா மும்முரம்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ரஷ்ய இன்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இடைவிடாமல் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் ஒலித்துள்ளன.

இதனால் மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலில் கீவ் பகுதியில் உள்ள கிடங்குகள், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் ஒரு சில்லறை விற்பனை நிலையம் சேதமடைந்ததாக பிராந்திய ஆளுநர் டைமூர் தகாசென்கோ தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உக்ரைனியர்களைச் சோர்வடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்