செய்தி

மத்திய கிழக்கில் சிறப்பு தூதுவரை களமிறங்கியது சீனா!

  • March 9, 2026
  • 0 Comments

உக்கிர போர் சூழலுக்கு மத்தியில், மத்திய கிழக்குக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Zhai Jun, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமைதி முயற்சியை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரியவருகின்றது. வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்த சவுதியுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். சவுதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருடன் நடத்திய ஆலோசனையில், பிராந்தியத்தின் இறைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

பிலிப்பைன்ஸ் பறந்தார் பிரதமர் ஹரிணி! விசேட உரைக்கு ஏற்பாடு!!

  • March 9, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Prime Minister Dr. Harini Amarasooriya பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நோக்கி நேற்றிரவு பயணமானார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB அழைப்பின் பேரில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

பொழுதுபோக்கு

ஏப்.03 திரைக்கு வருகிறது ‘காளிதாஸ் 2′

  • March 9, 2026
  • 0 Comments

பரத்தின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘காளிதாஸ்’திரைபடத்தின் அடுத்த பாகமான ‘காளிதாஸ் 2’ எதிர்வரும் 3 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில் 2ஆம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் பைவ் ஸ்டார் கே.செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் […]

இந்தியா செய்தி

இந்திய சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று விவாதம்!

  • March 9, 2026
  • 0 Comments

இந்திய மக்களவை சபாநாயகர் Lok Sabha Speaker ஓம் பிர்லாவுக்கு om Birla எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று (09) விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பாதீட்டு கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28 முதல் பெப்ரவரி 13 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதன்போது கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி Rahul Gandhi உரையாற்றினார். முன்னாள் ராணுவத் தளபதி நரவனே Commander Naravane நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை […]

இலங்கை செய்தி

அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததா? இலங்கை கூறுவது என்ன?

  • March 9, 2026
  • 0 Comments

“ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. “இதுவரை இந்த விடயம் தொடர்பாக எந்த உரையாடலும் இடம்பெறவில்லை.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara. தெரிவித்துள்ளார். “ இதுதொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது தூதரகத்தின் சார்பாகவோ யாரும் பேசவில்லை. இலங்கை நிலைமையை கையாளும் போது அதன் […]

உலகம்

ஈரான் நடத்திய தாக்குதலில் பஹ்ரைனில் 32 பேர் காயம்!

  • March 9, 2026
  • 0 Comments

தமது நாடுமீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று பஹ்ரைன் Bahrain தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. மத்திய கிழக்கில் 10 ஆவது நாளாக போர் தொடரும் நிலையில், ஈரான்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உக்கித் தாக்குதலை நடத்திவருகின்றன. மறுபுறத்தில் கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடித்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஷய்பா எண்ணெய் […]

உலகம் செய்தி

புதிய உச்ச தலைவரை தெரிவு செய்தது ஈரான்: இறங்கி அடிக்க தயாராகிறது அமெரிக்கா!

  • March 9, 2026
  • 0 Comments

“ஈரானுடனான போரில் வெற்றிபெறுவதற்காக எந்த கட்டத்துக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.” – என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் Pete Hegseth தெரிவித்தார். வெற்றிக்காக அமெரிக்கா போராடும் எனவும், சரணடைவதைத்தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார். அதேவேளை, ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி ojtaba Khamenei தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: இராணுவ உதவி வழங்குமா ஆஸ்திரேலியா?

  • March 9, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகள் Gulf countries சில ஆஸ்திரேலியாவிடம் Australia இராணுவ உதவியை கோரியுள்ளன என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தொடுக்கும் ட்ரோன் Drone மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதலில் ஈடுபடாமல் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் ஆதரவளிப்பது குறித்து ஆஸ்திரேலிய Australian அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது எனவும் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவிடம் தற்போதுள்ள ஏவுகணை அமைப்பு அல்லது உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை […]

இலங்கை செய்தி

இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா உறுதி!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கைக்கு Sri Lanka அமெரிக்கா US அழுத்தங்களை பிரயோகிக்காது என அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதே ஊடகமொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது விடயம் தொடர்பில் இலங்கையின் இறையாண்மை மதிக்கப்படும் எனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையிலேயே மேற்படி […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பலுக்கு அடைக்கலம்: பொன்சேகா கூறுவது என்ன?

  • March 7, 2026
  • 0 Comments

“ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை சரியான முடிவையே எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கமையவே செயல்பட்டுள்ளது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார். “ இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற் படையினர் மீட்டனர். இந்த நடவடிக்கை சர்வசதேச சமவாயங்களுக்கு உட்பட்டது. அப்பகுதியில் அமெரிக்க கப்பல் ஒன்று இருந்திருந்தால்கூட ஈரான் படையினரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். அதுதான் சர்வதேச சட்டம். எதிரணி […]

error: Content is protected !!