செய்தி

ஜெனிவா தொடரில் விஜித ஹேரத் பங்கேற்கமாட்டார்

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவருகின்றது.

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவருகின்றது.

அவர் இலங்கை அரசாங்க குழுவுக்கு தலைமை தாங்குவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்தார்.

எனினும், தற்போது அவருக்குப் பதிலாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி அரசாங்கத்தின் சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பார் என தெரியவருகின்றது.

அதேவேளை, செப்ரெம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார்.

ஐ.நா பொதுச் சபையில் கடைசி நாளான செப்ரெம்பர் 28 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி