இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததை தொடர்ந்து இன்று விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் 08 விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலைச் சாம்பல் காரணமாக, சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் வரை வியாபித்ததாக கூறப்படுகிறது.
மேலும் எரிமலை செயற்பாடு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் மட்டும் 964 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எட்டு விமான நிலையங்களிலும் பாதிக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது, இதில் 1,70,000 பயணிகள் பயணித்துள்ளனர் என்று அமைச்சகம் கூறியது.
அதேநேரம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், ஏர்ஏசியா மற்றும் லயன் ஏர் குரூப் ஆகியவை அன்றைய தினம் முழுவதும் ஜகார்த்தாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளன.




