இலங்கை செய்தி

“தமிழ் அரசியல் கைதிகள் பிணைகோரி நீதிமன்றத்தை நாடலாம்” – நீதி அமைச்சர்

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும்.

அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், வழக்கு விசாரணைகளோ அல்லது முறையான குற்றச்சாட்டுகளோ இன்றித் தற்போது தடுப்பில் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

15 வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதியொருவருக்கு நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கிய விவகாரத்தை சுட்டிக்காட்டியே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீதி அமைச்சர்:

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை பெற முடியும். அந்த நடைமுறையை நாடுவதற்கு அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை. தற்போது நீதிமன்றம் சுயாதீனமாகச் செயல்படுகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நேரடியாகத் தீர்மானம் எடுக்க முடியாது.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை