நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
முற்பகல் 11.30 மணி முதல் 5.30 மணிவரை விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் குறித்த பிரேரணை நேற்று கையளிக்கப்பட்டது.



