ஸ்பெயின் அதிரடி : இத்தாலி பயணிகளுக்கான சோதனைக் காலம் நீட்டிப்பு
இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்கு வருகைத் தரும் யணிகளுக்கான சோதனைகளை செப்டம்பர் 22 ஆம் திகதிவரை நீட்டிக்க மெட்ரிட் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக செப்டம்பர் 07 வரை மட்டுமே நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சியூடாவை புலம்பெயர்ந்தோர் முற்றுகையிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரும் பயணிகளுக்கான தடையற்ற பயண முறையை இத்தாலி முடிவுக்கு கொண்டுவந்தது.
இந்நடவடிக்கையானது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் பதிலடியா இந்தச் சோதனைகளை ஆகஸ்ட் 8 முதல் ஆரம்பித்திருந்தது.




