காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்டாத புறக்காவல் நிலையங்களை நீக்க உத்தரவு
காசாவின் மேற்குக் கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியேறிகளின் புறக்காவல் நிலையங்களை அகற்றுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து அறிந்த இருவர் இன்று இந்த விடயத்தை தெரிவித்ததாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்கள் மீதான குடியேறிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருககின்ற நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இதற்கமைய இஸ்ரேலிய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி குடியேறிகளால் நிறுவப்பட்ட புறக்காவல் நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை எப்போது தொடங்கும் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
புறக்காவல் நிலையங்கள் பொதுவாக முன் தயாரிக்கப்பட்ட கேரவன்களைக் கொண்டிருக்கும் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான குடியேறிகளுக்கு இடமளிக்கும். அரசு அவ்வப்போது இதுபோன்ற கட்டமைப்புகளை இடித்துத் தள்ளியுள்ளது, மேலும் சிலவற்றை முறையாக அங்கீகரித்து, அவை அரசாங்க நிதியுதவியைப் பெற அனுமதித்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.




