இலங்கை செய்தி

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கிய தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான Venerable Battaramulla Seelarathana Thero சிறு குழுவொன்றே இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி, போரில் மேற்படி நாடுகளுக்குரிய ஆதரவை வெளிப்படுத்தினர். இலங்கையில் நடந்தபோரின்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வழங்கி ஆதரவை தாங்கள் மறக்கவில்லை என்றபோதிலும், இந்த போரில் இஸ்ரேல் […]

அரசியல் இலங்கை செய்தி

மின்சார சபையின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்: அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!

  • March 9, 2026
  • 0 Comments

“தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டியுள்ளார். “ இலங்கையின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பியின் JVP நிலைப்பாடாக அமைந்திருந்தது. ஆனால் இன்று அதற்கு மாறான செயல்பாடே இடம்பெறுகின்றது.” எனவும் அவர் கூறினார். “மின்சார சபை ஊழியர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட […]

இலங்கை செய்தி

பெருந்தோட்ட அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்!

  • March 9, 2026
  • 0 Comments

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் தம்மாலங்கார தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவரும் ‘குறிவைப்பு’!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனத்துக்கு அமெரிக்காவின் ஒப்புதல் அவசியம் என டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லையேல் பதவிக்கு வருபவர் நீண்ட காலம் அப்பதவியில் நீடிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். எனினும், வெளியக தலையீடின்றி ஈரான் Iran தனது புதிய உச்ச தலைவரை நியமித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மறைந்த அயதுல்லா அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனியே Mojtaba Khamenei புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். […]

இந்தியா

இராஜதந்திர தீர்வை வலியுறுத்துகிறது இந்தியா!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு பேச்சு மற்றும் இராஜதந்திர வழியில் சிறந்த தீர்வை காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான […]

இலங்கை செய்தி

மகளை காணாமலேயே மரணமான தந்தை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!

  • March 9, 2026
  • 0 Comments

வவுனியாவில் காணாமல் போன தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று (08) மரணமடைந்துள்ளார். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ஜெயவனிதாவின் கணவரான பெரியமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை(66 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகளான கா.ஜெரோமி 2009 இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்ததார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரத்தில் […]

விளையாட்டு

இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து: கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

  • March 9, 2026
  • 0 Comments

ICC T- 20 உலகக் கிண்ணத்தை 3ஆவது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள், வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்திய அணி இதற்கு முன்னர் 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. போட்டியை நடத்திய […]

செய்தி

மத்திய கிழக்கில் சிறப்பு தூதுவரை களமிறங்கியது சீனா!

  • March 9, 2026
  • 0 Comments

உக்கிர போர் சூழலுக்கு மத்தியில், மத்திய கிழக்குக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Zhai Jun, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமைதி முயற்சியை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரியவருகின்றது. வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்த சவுதியுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். சவுதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருடன் நடத்திய ஆலோசனையில், பிராந்தியத்தின் இறைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

பிலிப்பைன்ஸ் பறந்தார் பிரதமர் ஹரிணி! விசேட உரைக்கு ஏற்பாடு!!

  • March 9, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Prime Minister Dr. Harini Amarasooriya பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நோக்கி நேற்றிரவு பயணமானார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB அழைப்பின் பேரில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

error: Content is protected !!