கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக பழிவாங்குவோம்: ஈரானிய பாதுகாப்பு அதிகாரி சபதம்
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் “எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை” தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் பாடசாலைக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் தெற்கு நகரமான மீனாப்பில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலே […]













